Categories
தேசிய செய்திகள்

மாரியப்பன் சாதனையால் தேசம் பெருமை கொள்கிறது… பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து…!!!

ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த மாரியப்பன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இன்று நடைபெற்ற டி63 போட்டியில் இறுதியாக அமெரிக்க வீரர் சாம் கிரீவ் – மாரியப்பன் இருவருக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்ட நிலையில், 1.88 மீட்டர் உயரம் தாண்டி அமெரிக்க வீரர் சாம் கிரீவ் தங்கம் வென்றார்.

இதையடுத்து 1.86 மீட்டர் உயரம் தாண்டி இந்திய வீரர் மாரியப்பன் வெள்ளிப்பதக்கம் வென்றார். மற்றொரு வீரரான சரத்குமார் வெண்கலப்பதக்கம் வென்றார். வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்த மாரியப்பனுக்கும், வெண்கல பதக்கம் வென்ற சரத்குமாருக்கும் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |