Categories
மாநில செய்திகள்

தமிழ் பெயரை எழுதினால் இப்படி எழுதவும்…. அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு…!!!

தமிழில் பெயர் எழுதும் பொழுது முன் எழுத்தையும் தமிழில் எழுதும் நடைமுறையை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13-ம் தேதி தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டிருந்த பட்ஜெட் தொடர்பான விவாதம் முடிவடைந்த நிலையில், மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் சட்டப்பேரவையில் நடைபெற்றது. இதில் தொழில்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை தொடர்பான கேள்விகளுக்கு அமைச்சர் தங்கம்தென்னரசு பதில் கூறினார்.

சட்டப்பேரவையில் அவர் பேசும்பொழுது தெரிவித்துள்ளதாவது: தமிழில் பெயர் எழுதும் போது முன் எழுத்தையும் தமிழில் எழுதும் நடைமுறையை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார். தமிழில் எழுதும் நடைமுறை பள்ளி, கல்லூரி, அரசு ஆவணங்களில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இம்முறையை பின்பற்ற ஊக்குவிக்கப்படும் எனவும் அவர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |