அரண்மனை-3 படத்தில் நடிகை ஆண்ட்ரியா கர்ப்பிணி பெண்ணாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான அரண்மனை திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து கடந்த 2016-ஆம் ஆண்டு இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை-3 படம் உருவாகியுள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சுந்தர்.சி, விவேக், யோகி பாபு, நளினி, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் அரண்மனை-3 படத்தில் ஆண்ட்ரியா கர்ப்பிணி பெண்ணாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.