பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக இந்த சீரியலில் இடம்பெற்றுள்ள பாக்கியா கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்போது ஸ்வாரசியமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் கோபி என்ற கதாபாத்திரம் அவரது மனைவி பாக்கியாவை ஏமாற்றி ராதிகா என்பவரிடம் ரகசிய உறவு வைத்துக்கொள்ள ஆசைப் படுகிறார்.
கோபி இப்படி செய்வது அவரது மகன் எழிலுக்கு மட்டுமே தெரியும். ஆனால் தற்போது கோபியின் வீட்டில் பணிபுரியும் செல்விக்கும் தெரிந்துவிடுகிறது. எப்படி என்றால், கோபியும், ராதிகாவும் ஒன்றாக சேர்ந்து கடையில் புடவை வாங்கிக் கொண்டிருக்கும் போது செல்வி அவர்களை பார்த்து விடுகிறார். இதன் மூலம் கோபியின் வீட்டில் நிச்சயம் பிரச்சினை வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.