Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகரின் கிண்டல் கமெண்ட்…. குக் வித் கோமாளி பிரபலம் வெங்கடேஷ் பட் பதிலடி….!!!

கிண்டலிட்டு ரசிகர் செய்த கமெண்ட்டுக்கு செஃப் வெங்கடேஷ் பட் பதிலடி கொடுத்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் வெங்கடேஷ் பட். இவர் தற்போது கன்னடத்தில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கிறுக்கு எனும் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். மேலும் இவர் பிரபல டாப் ஹோட்டலின் CEOவாக இவர் இருக்கிறார்.

இதை தவிர அவர் தனது சொந்த யூடியூப் சேனலில் தான் புதிதாக சமைக்கும் வீடியோக்களையும் பதிவு செய்து வருகிறார். இந்நிலையில் அவர் செய்த வீடியோவிற்கு கீழ் ரசிகர் ஒருவர் “ஒரு மிகப்பெரிய செஃப் உணவு சமைக்கும் பொழுது கைகளில் கயிறு எல்லாம் கட்டிக் கொள்ளலாமா, கேட்டா பெரிய செஃப்” என்று கிண்டலிட்டு கமெண்ட் செய்துள்ளார்.

இதனை கண்ட வெங்கடேஷ் பட், “முறைப்படி பாத்தா சமைக்கும் போது பேசவே கூடாது. ஆனால் டீவில அதை ஃபாலோ பண்ண முடியாது. அது போல என் கையில் கயிறு இருப்பது என் நம்பிக்கை. கற்றுக்கொடுப்பது நான் கற்ற விதை. நீங்கள் பார்க்க வேண்டியது என் திறமையை. கையில் உள்ள கயிற்றை அல்ல” என்று பதில் கொடுத்துள்ளார்.

Categories

Tech |