கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவையை வங்கதேச விமான நிறுவனம் சமீபத்தில் தொடங்கியது.
கடந்த 27ம் தேதி வங்கதேசத்தின் விமானம் ஒன்று மஸ்கட்டில் இருந்து டாக்காவுக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது ராய்ப்பூர் அருகே பறந்து கொண்டிருந்த போது திடீரென்று விமானிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த நாக்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரை இறக்கப்பட்டு, அங்கிருந்து விமானி அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருடைய பெயர் நவ்ஷாத் அதுல். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.