Categories
உலக செய்திகள்

‘மகாராணியாருக்கும் தெரியும்’…. இளவரசருடன் தொடர்பில் இருந்த பெண்…. பேட்டி அளித்த ராஜ குடும்ப நிபுணர்….!!

பிரித்தானியா இளவரசருடன் நீண்டக்கால தொடர்பில் இருந்த பெண் குறித்து ராஜ குடும்ப நிபுணர் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

பிரித்தானியாவில் உள்ள ராஜ குடும்பம் குறித்து அவர்களின் குடும்ப நிபுணரான Robert Jobson பேட்டி ஒன்றை பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ளார். அதில் ” Prince Philip’s Century: The Extraordinary Life of the Duke of Edinburgh என்ற புத்தகம் குறித்து பேசினார். அவற்றுள்  இளவரசர் பிலிப்பிற்கும் பல பெண்களுக்கும் இடையேயான நட்பு குறித்து கேட்கும் போது ஒரு பெண்ணும் இளவரசரும் மிக நட்பாக பழகி உள்ளார்கள் என்று தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கண்ட மற்றவர்கள் உறவில் இருந்ததாக கூறினர். ஆனால் அவர்களுக்கிடையில்  நிஜமாகவே அப்படி ஒன்றும் நடக்கவில்லை.

இதனையடுத்து இளவரசரின் தோழியான பென்னி என்ற Penelope Eastwoodன் கணவர் ஒரு பேஷன் டிசைனர் உடன் ஓடி சென்றதாகவும் அவர் மகன் மதுவிற்கு அடிமையாகி விட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த நிலையில் இளவரசர் பிலிப்பின் கருணையும் பாசமும் பென்னிக்கு கிடைத்துள்ளது. ஆனால் மற்றவர்கள் நினைப்பது போல பென்னிக்கும் இளவரசரக்கும் வேறு எந்த தொடர்பும் கிடையாது என்பது அரண்மனை மட்டும் அல்ல மகாராணியாரும் அறிந்த விஷயமே. இவர்களுக்கு இடையேயான நட்பு கடைசி வரை தொடர்ந்துள்ளது. அதாவது, இளவரசர் பிலிப் தன் கடைசி நாட்களை Sandringham என்னும் எஸ்டேட்டில் கழித்துக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது அவரைக் காண ராஜ குடும்ப உறுப்பினர் அல்லாத ஒரு சில மக்களை மட்டுமே உள்ளே அனுமதித்துள்ளனர். அதில் பென்னியும் ஒருவர். மேலும் இளவரசர் பிலிப் இறந்த போது நெருக்கமானவர்கள் கூட கொரோனா தொற்றை காரணம் காட்டி  இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் பென்னி மட்டும் அவரின் இறுதி சடங்கில்  அனுமதிக்கப்பட்டார் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. அதிலும் இளவரசர் பிலிப்புடன் நீண்டக்கால பெண் தோழியாக இருந்தவர் பென்னி ஒருவரே என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |