முதல்வர் மு.க ஸ்டாலின் கொரோனா முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மற்றும் பள்ளிகள் திறப்பு தொடர்பாக சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து தமிழகத்தின் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கினை செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா பரவ வாய்ப்புள்ளதால் சில இடங்களில் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் ஆகஸ்ட்-9 முதல் 23-ம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் மத வழிப்பாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து மேலும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.