Categories
விளையாட்டு

உலக சாதனை படைத்த சுமித் அண்டில்…. பிரதமர் மோடி வாழ்த்து….!!!

பாராலிம்பிக்கின் ஏழாவது நாளாக நடைபெற்று வரும் போட்டியில், ஈட்டி எறிதலில் இந்திய வீரர் சுமித் அண்டில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இந்தியாவின் சுமித் அண்டில் 68.55 மீட்டர் எறிந்து தங்கம் வென்றது மட்டுமல்லாமல் புதிய உலக சாதனையை படைத்துள்ளார். முதல் வாய்ப்பில் 66.95 மீட்டர் எரிந்து உலக சாதனையை முறியடித்த சுமித், இரண்டாம் வாய்ப்பில் 69.08 மீட்டர் எரிந்து உலக சாதனையை முறியடித்தார். சற்று வேகத்தை குறைக்காத அவர் ஐந்தாம் சுற்றில் 68.55 மீட்டர் எரிந்து மீண்டும் உலக சாதனையை முறியடித்துள்ளார்.

டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியா வெல்லும் 2-வது தங்கம் இதுவாகும். இந்நிலையில் பாராலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற சுமித்துக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது “நம் வீரர்கள் தொடர்ந்து பாராலிம்பிக்கில் ஜொலித்து வருகின்றனர். உலக சாதனை படைத்த சுமித் குறித்து நாடே பெருமை கொள்கின்றது. தங்கம் வென்றதற்கு வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |