மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் 54 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் பலரும் வெள்ளி, தங்கம், வெண்கலம் போன்ற பதக்கங்களை பெற்று வருகின்றன. ஏழாவது நாளான இன்று F-64 பிரிவில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சுமித் அண்டில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
இந்தியாவின் சுமித் அண்டில் 68.55 மீட்டர் எறிந்து தங்கம் வென்றது மட்டுமல்லாமல் புதிய உலக சாதனையை படைத்துள்ளார். முதல் வாய்ப்பில் 66.95 மீட்டர் எரிந்து உலக சாதனையை முறியடித்த சுமித், இரண்டாம் வாய்ப்பில் 69.08 மீட்டர் எரிந்து உலக சாதனையை முறியடித்தார். சற்று வேகத்தை குறைக்காத அவர் ஐந்தாம் சுற்றில் 68.55 மீட்டர் எரிந்து மீண்டும் உலக சாதனையை முறியடித்துள்ளார். டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியா வெல்லும் 2-வது தங்கம் இதுவாகும்.