Categories
மாநில செய்திகள்

கொடூரத் தாய் துளசிக்கு… 15 நாள் சிறை தண்டனை… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

குழந்தையை கொடூரமாக தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட தாய் துளசிக்கு 15 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி மணலப்பாடி மதுரா கிராமத்தை சேர்ந்த துளசி என்பவர் தனது ஒன்றரை வயது குழந்தையை கண்முன்னே கண்மூடித்தனமாக தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த காட்சியைப் பார்த்த பலரும் அவரை திட்டித் தீர்த்தனர். இதையடுத்து விழுப்புரம் மாவட்டம் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் குடும்ப தகராறு காரணமாக குழந்தையை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் வேறு ஒருவருடன் அவருக்கு கள்ள தொடர்பு இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருப்பினும் துளசி மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் அவருக்கு மன நல பரிசோதனை நடத்துவதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மனநல பாதிப்பு இல்லை என்று உறுதி அளித்துள்ளனர். இந்நிலையில் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் சிறையில் அடைக்க செஞ்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories

Tech |