ராதே ஷ்யாம் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தில் நடித்து இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ். தற்போது இவர் சலார், ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார் . மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீஸாக உள்ளது .
As we celebrate Janmashtami, let Vikramaditya and Prerna teach you a new meaning of love! 💕
Here's wishing you all a very Happy Janmashtami! #RadheShyamStarring #Prabhas & Myself pic.twitter.com/1kRp8UDDdr
— Pooja Hegde (@hegdepooja) August 30, 2021
மேலும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ஜென்மாஷ்டமி தினமான இன்று ராதே ஷ்யாம் படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த அழகிய போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மேலும் அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது .