விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதிகள் வடிவழகன் -துளசி. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது. இந்த தம்பதியினருக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை வந்ததன் காரணமாக துளசி தன்னுடைய தாய் வீட்டில் இருந்துள்ளார். இதனிடையே துளசி தன்னுடைய இரண்டாவது மகனை சரமாரியாக தாக்கி தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளார்.
இந்த வீடியோவானது இணையத்தில் வெளிவந்த நிலையில் பலரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் துளசியை போலீசார் கைது செய்து துருவி துருவி விசாரணை நடத்தி வந்ததையடுத்து துளசி பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில் ஆண் நண்பர் பிரேம்குமார் என்பவருடன் ஏற்பட்ட பிரச்சினையால் குழந்தையை தாக்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து தனிப்படை காவல்துறையினர் பிரேம் குமாரை பிடிப்பதற்காக சென்னை விரைந்துள்ளனர்.