Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! பணவரவு சீராக இருக்கும்….! திறமை வெளிப்படும்….!!

கும்பம் ராசி அன்பர்களே.! பொருளாதாரம் மேம்படும் பண வரவு சீராக இருக்கும். 

இன்று அயல்நாட்டு முயற்சிகளில் அனுகூலம் கிடைக்கும். ஆனால் அவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். ஆடை ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். வீட்டை விரிவுபடுத்தும் முயற்சியில் வெற்றி ஏற்படும். திறமை வெளிப்படும். எல்லா கஷ்டங்களும் நீங்கிவிடும். பொருளாதாரம் மேம்படும் பண வரவு சீராக இருக்கும். வேலைப்பளு காரணமாக நேரம் தவறி உணவு உண்ண வேண்டிய சூழல் இருக்கும். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்கள் விரிவடையும். இன்றைய நாளை உங்களால் அற்புதமாக வழிநடத்திச் செல்ல முடியும். பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தில் ஈடுபட்டாலும் வெற்றி நிச்சயம். பெண்கள் மன அமைதியுடன் செயல்படுவீர்கள். காதலில் உள்ளவர்களுக்கு சின்னதாக மனவருத்தங்கள் இருக்கும்.

காதலின் நிலைபாடுகள் மன வருத்தத்தை ஏற்படுத்தும். காதல் எனக்கு சரி வருமா சரி வராதா என்ற சிந்தனைகள் ஓடிக்கொண்டிருக்கும். சூழ்நிலைகளை ஒப்பீட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டும். மாணவர்களுக்கு தைரியம் இருக்கும். கல்வி மீது அக்கறை இருக்கும். கல்வியில் சாதிக்கக்கூடிய அமைப்பு இருக்கும். மாணவர்களால் எதையும் செய்யமுடியும். இன்று முக்கியமான பணியினை மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு மேற்கு                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 9                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை

Categories

Tech |