Categories
சினிமா தமிழ் சினிமா

நேரடியாக டிவியில் ரிலீஸாகும் விஜய் சேதுபதி படம்… வெளியான அசத்தலான புரோமோ…!!!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார் திரைப்படம் நேரடியாக சன் தொலைக்காட்சியில் ரிலீஸாகவுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது விடுதலை, விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள லாபம், அனபெல் சேதுபதி, துக்ளக் தர்பார், கடைசி விவசாயி, மாமனிதன் போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதில் லாபம் திரைப்படம் செப்டம்பர் 9- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, டாப்சி இணைந்து நடித்துள்ள அனபெல் சேதுபதி திரைப்படம் செப்டம்பர் 17-ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படம் வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு நேரடியாக சன் டிவியில் ரிலீஸாகவுள்ளது. தற்போது இது குறித்த புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கியுள்ள இந்த படத்தில் பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

Categories

Tech |