காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள ஆனையம்பட்டி பகுதியில் மணிபாரதி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் கௌசல்யா என்ற பெண்ணும், மணிபாரதியும் காதலித்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் வீட்டை விட்டு வெளியேறிய காதலர்கள் மாரியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து விட்டு காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். அதன்பிறகு காவல்துறையினர் இரண்டு பேரின் பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன்பிறகு காவல்துறையினர் கௌசல்யாவை மணிபாரதியுடன் அனுப்பி வைத்துள்ளனர்.