Categories
மாநில செய்திகள்

காலாவதியான சுங்கச்சாவடிகளை…. உடனே அகற்றுங்க…. விக்கிரமராஜா கோரிக்கை…!!!

தமிழகத்தில் காலாவதியான சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சுங்கச் சாவடிகள் தொழில் கூடமாக  மாறியிருக்கிறது. படிப்படியாக சுங்கச்சாவடிகளை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கட்டணம் குறைவாக இருந்தால் மக்களே விரும்பி தாங்களாக முன்வந்து கட்டணத்தை செலுத்துவார்கள். ஆனால் கட்ட முடியாத அளவிற்கு சுங்க கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என்று ஒவ்வொருவிதமாக கட்டணம் வாடகையாக வசூலிக்கப்படுகிறது. எனவே ஒரே சீரான வாடகை கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |