Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சிந்துவா இது? வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சரியம்…!!!

பிரபல நடிகை சிந்து மேனனின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து அவர்களது ரசிகர்கள் ஆச்சரியப் பட்டு வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் கடந்த 2001ஆம் ஆண்டு முரளி நடிப்பில் வெளியான சமுத்திரம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை சிந்து மேனன் அதன்பிறகு யூத், ஈரம் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் அடுத்தடுத்து படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென கடந்த 2010ஆம் ஆண்டு டொமினிக் பிரபு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு தற்போது 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நடிகை சிந்து வின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் அவர் உடல் எடை கூடி குண்டாக இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்க்கும் அவரது ரசிகர்கள் “அட நம்ம சிந்துவா இது” என ஆச்சர்ய பட்டு வருகின்றனர்.

Categories

Tech |