Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

2 வருட தேடுதல் பணி…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வீடு புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சங்கராபுரத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு 2 வீடுகளின் கதவை உடைத்து மர்ம நபர் நகை, பணம் உள்ளிட்டவற்றை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து வள்ளியூர் சமய்சிங் மீனா, பணகுடி இன்ஸ்பெக்டர் சகாய சாந்தி ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

இதுதொடர்பாக கொண்டாநகரம் பகுதியில் வசிக்கும் ராமையா என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் நகை, பணம் உள்ளிட்டவற்றை திருடி சென்றது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ராமையாவை கைது செய்ததோடு அவரிடமிருந்த ரூ.84 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் 9 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |