Categories
சினிமா தமிழ் சினிமா

புது படங்களில் கமிட் ஆகாத திரிஷா… விரைவில் திருமணமா?…!!!

நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் ஜோடி படத்தின் மூலம் துணை நடிகையாக அறிமுகமானவர் திரிஷா. இதன்பின் இவர் சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தார். இதை தொடர்ந்து இவர் விஜய், அஜித் போன்ற டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள கர்ஜனை, ராங்கி, சதுரங்க வேட்டை-2 ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது நடிகை திரிஷா மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.

பிரகாஷ்ராஜ் கொடுத்த கிரீன் இந்தியா சேலஞ்சை நிறைவேற்றிய திரிஷா! - Film Crazy

இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் எந்த ஒரு புது படங்களிலும் நடிக்க கமிட் ஆகவில்லை என்றும் கூறப்படுகிறது. விரைவில் திரிஷாவின் திருமணம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |