Categories
மாநில செய்திகள்

சரியான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால்…. 30 நாட்களுக்குள் அனுமதி…. அதிரடி அறிவிப்பு…!!!

சென்னையில் சரியான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் 30 நாட்களுக்குள் கட்டட அனுமதி வழங்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மாநகராட்சியில் கட்டிட அனுமதி பெறுவதற்கு அந்த கட்டிட உரிமையாளர்கள் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு பெறப்படும் கட்டட அனுமதிக்கான விண்ணப்பங்கள் மீது அலுவலர்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உரிய கட்டணம் செலுத்தியதற்கான ரசீது கொடுக்கப்படுகிறது.

அந்த விண்ணப்பத்தினை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கட்டணத் தொகையை இணையதளத்திலோ அல்லது கேட்பு வரைவோலையின் மூலமாகவோ செலுத்தலாம். இதனையடுத்து இணையதளம் வழியாக கட்டட அனுமதி அளிக்கப்படுகிறது. இதுதொடர்பான புகாரை 1913 என்ற தொலைபேசி எண்ணிலும் 944 5190748 என்ற வாட்ஸ் அப் எண்ணிலோ தெரிவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |