Categories
மாநில செய்திகள்

போலிச் சான்றிதழ்கள் மூலம் வேலை…. போக்குவரத்துக்கழக அதிகாரிகளை…. பணி நீக்கம் செய்ய உத்தரவு…!!!

தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றிய சீனிவாசன் என்பவர் பள்ளி மாற்றுச் சான்றிதழ்களை போலியாக கொடுத்து வேலையில் சேர்ந்ததால் கடந்த 2003ஆம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த உத்தரவை வேலூர் தொழிலாளர் நல நீதிமன்றம் உறுதி செய்தது. இதை எதிர்த்து சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், போலி சான்றிதழ் கொடுத்ததாக என்னை மட்டும் பணி நீக்கம் செய்துள்ளனர். ஆனால் ஒரு சிலர் போலி சான்றிதழ் கொடுத்து, சிறிய தண்டனைகளுடன் பணியில் தொடர அனுமதி அளிக்கப் பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், மனுதாரர் போலி சான்றிதழ்களை சமர்பித்து பணியில் சேர்ந்தது நிரூபணம் ஆகியுள்ளதால் அவருக்கு மீண்டும் பணி நியமனம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது. அவரை பணி நீக்கம் செய்தது சரிதான். எனவே அவருடைய வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். அதே சமயம் போலி சான்றிதழ் கொடுத்து போக்குவரத்துக் கழகத்தில் பணி நியமனம் வழங்கிய அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |