Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! கோபத்தை குறைக்க வேண்டும்….! உற்சாகம் இருக்கும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! பண பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டாம்.

இன்று அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைத்து மகிழும் நாளாக இருக்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் கண்டிப்பாக கிடைக்கும். வருமானத்தை உங்களால் பெருக்கிக்கொள்ள முடியும். உத்தியோக முன்னேற்றம் பற்றிய சிந்தனை தலை தூக்கும். விண்ணப்பித்த வேலைவாய்ப்புகள் கிடைப்பதற்கான சூழல் இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எண்ணங்கள் எல்லாம் பூர்த்தியாகும். நினைத்தது எல்லாம் நடக்கும். தொழில் வியாபாரத்தில் நெருக்கடியான சூழல் ஏற்பட்டாலும் அதனை உங்களால் சமாளித்து முன்னேற முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை அலட்சியம் காட்டாமல் செய்வது நல்லது. சேமிப்புகளை கரைக்க வேண்டாம். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உடல் சோர்வாகக் காணப்படும். அது உழைப்பின் காரணமாக இருக்கும்.

பயணங்கள் செல்லவேண்டியிருக்கும். நீண்ட நேரம் பயணங்கள் செல்வதற்கான சூழல் இருக்கும். இரவு நேர பயணங்களை மற்றும் தவிர்க்க வேண்டும். பண பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டாம். உற்சாகமாக சில காரியங்களில் ஈடுபடுவீர்கள். காதலில் உள்ளவர்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். முன்கோபம் வெளிப்படும். அதனால் பார்த்து பக்குவமாக பேச வேண்டும். மாணவர்கள் கல்வி மீது அக்கறை கொள்ள வேண்டும். மூர்க்கத்தனமாக விளையாடாமல் இருக்க வேண்டும். எல்லாவற்றிலும் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                            அதிர்ஷ்டமான எண்:   3 மற்றும் 7                                                                                                          அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் வெளிர் நீலம்

Categories

Tech |