அயோத்தி வழக்கின் விசாரணையை இன்று மாலை 5 மணிக்குள் முடித்து விடுங்கள் என்று தலைமைநீதிபதி ரஞ்சன் கோக்காய் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றம் எதிர்காலத்தில் இப்படி ஒரு வழக்கை விசாரிக்குமா ? இவ்வளவு நாட்கள் எடுத்து விசாரிப்பார்களா ? என்ற கேள்வி அயோத்தியா வழக்கில் எழுந்துள்ளது. இந்த வழக்கு மிக முக்கியமான அயோத்தி வழக்காக பார்க்கப்படுகின்றது. இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கிய உடனேயே ”நாட்டின் மிக சென்சிட்டிவான” விஷயத்தை நாங்கள் எடுத்துக் கொள்ளப் போகின்றோம் என்று தெரிவித்து தினமும் விசாரணையை உச்சநீதிமன்றம் நடத்தியது. எனவே நிறைய நாட்கள் எடுத்துக் கொள்ளப் போகிறது என்ற விஷயத்தை குறிப்பிட்டுவிட்டு வாரத்திற்கு ஐந்து நாட்களும் 4 மணி வரை தான் நீதிமன்றம் செயல்படும் என்ற போதிலும் 5 மணி வரை விசாரணை நடத்தினர்.
இன்றுடன் அயோத்தி வழக்கு விசாரணை 40 நாட்கள் ஆகி இருக்கிறது.உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து 40 நாட்கள் விசாரித்துள்ளது என்றால் இதன் முக்கியத்துவம் உச்சநீதிமன்றத்திற்க்கே தெரிகின்றது. தற்போது இதன் விசாரணை இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த வழக்கை விசாரணை விரைவில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று மாலை 5 மணியுடன் முக்கியமான அனைத்து தரப்பினரும் தங்களது வாதங்களை நிறைவு செய்துவிட வேண்டும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோக்காய் தெரிவித்து இருக்கிறார். எனவே இன்றைய தினம் வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பானது தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் சரியாக ஒரு மாதத்தில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும் , இந்த வழக்கை விசாரித்த வரக்கூடிய இந்த அமர்வுக்கு தலைமை வகித்து வரும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோக்காய் பணி காலம் முடிய சரியாக இன்னும் ஒரு மாதம் தான் உள்ளது. எனவே இந்த வழக்கின் தீர்ப்பு ஒரு மாதத்திற்குள் தெரிவிக்கப்படும் . இந்தியாவின் மிக ,முக்கியமான வழக்கங்களில் ஒன்றாக பார்க்கப்படும் இந்த வழக்கின் தீர்ப்ப்பை தீபாவளி போன்ற விடுமுறையில் ஓய்வு எடுக்காமல் பணி செய்து தீர்ப்பை எழுத இருக்கிறார்கள். இந்த வழக்கில் கூடுதலாக கால அவகாசம் கேட்டு இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் கால அவகாசம் கேட்டது. அதற்க்கு மறுத்த நீதிபதிகள் இன்று மாலை 5 மணிக்குக்குள் அனைத்து தரப்பு வாதங்களையும் முடித்து விடுங்கள் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.