Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING : ‘விரைவில் பிகில் வெளியீட்டு தேதி’ தயாரிப்பாளர் அறிவிப்பு ….!!

பிகில் திரைப்பட வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். 

அட்லி இயக்கத்தில் தெறி , மெர்சல் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து 3வது முறையாக விஜய் – அட்லி பிகில் படத்தில் இணைந்துள்ளனர் .  இப்படத்தை அர்ச்சனா கல்பாத்தியின் ஏஜிஎஸ் என்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது . ஏஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த  கதையம்சத்தை கொண்டதாகவும், விஜய் கால்பந்து பயிற்சியாளராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அப்பா, மகன் என இரண்டு வேடத்தில் விஜய் நடித்திருப்பதாக தெரிகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். மேலும் காமெடி நடிகர் விஜய், டேனியல் பாலாஜி, யோகி பாபு, பரியேரும் பெருமாள் கதிர் உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.பிகில் படத்தின் ட்ரைலர் கடந்த 12_ஆம் தேதி வெளியாகி பல சாதனைகளை செய்தது.

இந்நிலையில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்வீட்_டர் பக்கத்தில் பிகில் படத்துக்கான சென்சார் பணிகள் நிறைவடைந்துவிட்டன என்றும் விரைவில் படத்தில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படுமென்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |