Categories
உலக செய்திகள்

இளவரசியை அழைக்க சென்ற ஹெலிகாப்டர்…. திடீரென ஏற்பட்ட பழுது…. தவிர்க்கப்பட்ட விபரீதம்….!!

இளவரசியை அழைத்துவர புறப்பட்ட ஹெலிகாப்டரில் திடீரென பழுது ஏற்பட்டுள்ளதால் மாற்று ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் தங்கியிருக்கும் பிரித்தானிய மகாராணியாரின் மகள் இளவரசி Anne ஆவார். அவரை அழைத்து வருவதற்காக மகாராணியாரின் ஹெலிகாப்டர் ஒன்று அரண்மனையிலிருந்து புறப்பட்டுள்ளது. அந்த ஹெலிகாப்டர் வானில் பறந்து கொண்டிருக்கும் போது திடீரென அதில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக அந்த ஹெலிகாப்டர் Newcastle விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

மேலும் அந்த ஹெலிகாப்டர் பழுதடையும் போது பிரித்தானிய மகாராணியாரின் அரண்மனையைச் சேர்ந்த யாரும் அதில் பயணிக்கவில்லை. அதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. அதன்பின் இளவரசி Anne Sikorsky S-76 வகையைச் சேர்ந்த மற்றொரு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டுள்ளார். அந்த வகையை சேர்ந்த ஹெலிகாப்டரின் மதிப்பு 5 மில்லியன் பவுண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |