விருச்சிகம் ராசி அன்பர்களே.! வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.
இன்று எதார்த்த பேச்சு சிலர் மனதை சங்கடப்படுத்தும். நீங்கள் அன்பாக தான் பேசுவீர்கள். ஆனால் அவர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் சில மாற்றங்கள் இருக்கும். அதனால் நீங்கள் பேச்சை குறைத்துக் கொள்ள வேண்டும். நிதானமாகப் பேச வேண்டும். எதிர்வரும் பணிகளுக்கு முன்னேற்பாடு அவசியம். எந்த ஒரு பிரச்சனையையும் முன்கூட்டியே கையாள வேண்டும். தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை கொஞ்சம் ஏற்படும். அளவான பணவரவு இருக்கும். போக்குவரத்தில் கவனம் செலுத்த வேண்டும். வாகனத்தில் பொறுமையாக சென்று வரவேண்டும். தடைபட்ட காரியங்களில் தடை கண்டிப்பாக நீங்கிவிடும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும். எதையும் தெளிவாக செய்யக்கூடிய எண்ணங்கள் இருக்கும். வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். பிரச்சனை இல்லாமல் இருக்கலாம்.
மனதை நீங்கள் தைரியமாக வைத்துக் கொள்ள வேண்டும். சூழ்நிலைகளுக்கு ஏற்ப முடிவெடுக்க வேண்டும். ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். காதலில் உள்ளவர்களுக்கு சின்னதாக பிரச்சினைகள் இருக்கும். பழைய நினைவுகள் ஏற்பட்ட மன குழப்பங்கள் தான் பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கும். மனதை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும். கூடுமானவரை பேச்சை மட்டும் குறைத்துக் கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் சாதிக்க கூடிய நாள். மாணவர்களுக்கு வெற்றி என்பது சுலபமாக கிடைக்கும். நினைத்த காரியத்தை கூட மாணவர்களால் சிறப்பாக செய்ய முடியும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதினால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் வெளிர் நீலம்