விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள லாபம் படத்தின் புதிய பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார், லாபம், அனபெல் சேதுபதி ஆகிய படங்கள் விரைவில் ரிலீஸாகவுள்ளது. இதில் துக்ளக் தர்பார் படம் நேரடியாக தொலைக்காட்சியிலும், அனபெல் சேதுபதி படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரிலும் வெளியாக இருக்கிறது. மேலும் மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனின் கடைசி படமான ‘லாபம்’ படம் வருகிற செப்டம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் கலையரசன், ஜெகபதி பாபு, சாய் தன்ஷிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் மற்றும் 7சி.எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் லாபம் படத்தில் இடம்பெற்ற ‘கிளாரா மை நேம் இஸ் கிளாரா’ என்ற கலக்கலான பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.