சேலம் பெரியார் பல்கலைக் கழகம் அருகே தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகன ஓட்டுநர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
சேலம் மாவட்ட தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரி வாகனங்கள் விபத்துக்கு உள்ளாவதை தடுக்கும் முயற்சியாக ஓமலூர் மோட்டார் வாகன அலுவலகம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த ஏராளமான வாகன ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர். சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் சாலை பாதுகாப்பு குறித்த பல்வேறு விளக்கங்களையும் அறிவுரைகளையும் ஓட்டுநர்களுக்கு வழங்கினார்.