அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது .
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் இரு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா. சுகுமார் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பிரபல மலையாள நடிகர் பகத் பாஸில் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
You've seen #PushpaRaj, now meet his nemesis 🔥
First look of #FahadhFaasil tomorrow at 10.08 AM!#PushpaTheRise #ThaggedheLe 🤙#VillainOfPushpa@alluarjun @iamRashmika @Dhananjayaka @aryasukku @ThisIsDSP @resulp @adityamusic @MythriOfficial pic.twitter.com/3MANidRg7r
— Pushpa (@PushpaMovie) August 27, 2021
சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் புஷ்பா படத்தின் முதல் பாகம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் பகத் பாசில் கதாபாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை (ஆகஸ்ட் 28) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இது பகத் பாசில் நடிக்கும் முதல் தெலுங்கு படம் என்பது குறிப்பிடத்தக்கது.