விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துக்ளக் தர்பார். டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கியுள்ள இந்த படத்தில் ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பார்த்திபன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த படத்தை ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது.
#TughlaqDurbarTrailer from 31st August.@DDeenadayaln @7screenstudio @RaashiiKhanna_ @mohan_manjima @rparthiepan #GovindVasantha @manojdft @samyuktha_shan @thinkmusicindia @SunTV @Netflix_INSouth @proyuvraaj pic.twitter.com/AGBlBGyiB9
— VijaySethupathi (@VijaySethuOffl) August 27, 2021
ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது இந்த படம் விநாயகர் சதுர்த்தி அன்று நேரடியாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் துக்ளக் தர்பார் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற ஆகஸ்டு 31-ஆம் தேதி இந்த படத்தின் டிரைலர் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.