சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதம் நடைபெறுகிறது. அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்து பேசுகிறார். இந்நிலையில் சுங்கச்சாவடிகளை முழுமையாக அகற்ற வேண்டும். பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் போல தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் சுங்கசாவடிகளில் கட்டணம் செலுத்தாமல் பயணம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன் கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் அமைச்சர் எ.வ.வேலு, தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான சுங்கச்சாவடிகள் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. நகர்ப்பகுதிகளில் உள்ள பரனூர், வானகரம் உள்ளிட்ட 5 சுங்கசாவடிகளை அகற்றுமாறு ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம் என்று கூறினார்.