Categories
தேசிய செய்திகள்

”ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தத் திட்டம்” உளவுத்துறை எச்சரிக்கை…!!

ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பினர் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தப்போவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

உளவுத்துறை இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், புல்வாமா தாக்குதலையடுத்து பயங்கரவாதிகள் கார் குண்டுகள் மூலம் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தயிருப்பதாகவும், இதில் லஷ்கர் இ தொய்பா அமைப்பினர் ஈடுபட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் அரசு வாகனங்களைக் கடத்தி அந்த வாகனம் மூலமே தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.இந்நிலையில், ராஜஸ்தானிலிருந்து ஜம்மு காஷ்மீர் சென்ற டிரக் ஒன்றில் ஓட்டுநரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். இதனையடுத்து ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

Categories

Tech |