Categories
தேசிய செய்திகள்

கல்லூரி மாணவியை புதருக்குள் வைத்து… 6 பேர் செய்த கொடூரம்… காதலன் கண்முன்னே காதலிக்கு நேர்ந்த கொடுமை…!!!

மைசூரு அருகே காதலனை தாக்கிவிட்டு காதலியை 6 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மைசூரில் செயல்பட்டுவரும் ஒரு கல்லூரியில் 20 வயது மாணவி படித்து வருகிறார். அதே கல்லூரியில் படிக்கும் ஒருவரை அவர் காதல் செய்து வருகிறார். அந்த மாணவியும், காதலனும் நேற்றுமுன்தினம் மாலை ஐந்து முப்பது மணி அளவில் ஒரு காரில் சாமுண்டி மலை அடிவாரத்தில் சென்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் மாணவியின் காதலனை பிடித்து சரமாரியாக தாக்கி, அந்த இளம்பெண்ணை இழுத்துச் சென்று புதருக்குள் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பிறகு அந்த இளம்பெண்ணிடம் இதை வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

இதையடுத்து காதலன் காதலியை அழைத்துச் சென்று அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தனர். பின்னர் மருத்துவமனை நிர்வாகம் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் இளம்பெண்ணிடமும், காதலனிடமும் விசாரணை செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த பிறகு இந்த புகாரில் ஆர்வம் காட்டவில்லை. இந்த கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்கள் காதலனின் நண்பர்களாக இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்த காரணத்தினால் காதலனை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இந்த ஆறு பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |