Categories
தேசிய செய்திகள்

பரபரப்பான சாலையில்… நடுரோட்டில் வைத்து பெண்ணிற்கு முத்தம் கொடுத்த மர்ம நபர்…. வைரலாகும் வீடியோ…!!!!

பாகிஸ்தானில் ஷேர் ஆட்டோவில் அமர்ந்திருந்த பெண் ஒருவருக்கு ஒரு இளைஞர் முத்தம் கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கடந்த ஆகஸ்டு 14ஆம் தேதி பாகிஸ்தானில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அந்நாளில் நடுரோட்டில் பெண் ஒருவருக்கு யாரென்று தெரியாத ஒருவர் முத்தம் கொடுத்த வீடியோ வைரலாக பரவி வருகிறது, அந்த வீடியோவில் ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் பரபரப்பான சாலையில் இரண்டு பெண்கள் பின்புறம் அமர்ந்து செல்கின்றன. அவர்களுக்கு இடையே ஒரு குழந்தை இருக்கின்றது. அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு மர்ம நபர் ஆட்டோ ரிக்ஷாவில் ஏறி அமர்ந்திருந்த பெண்ணிற்கு முத்தம் கொடுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த சம்பவத்தை பைக்கில் வந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து கொண்டிருந்தார். ஆட்டோவில் அமர்ந்திருந்த பெண் தனக்கு முத்தம் கொடுத்தவர் யார் என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தார். பின்னர் அருகில் இருந்த பெண் தன் கையில் செருப்பை எடுத்துக் காட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுதந்திர தினத்தன்று ஒரு பெண்ணிற்கு நடந்த கொடுமைக்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

Categories

Tech |