Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர்… வழியில் ஏற்பட்ட விபரீதம்… சரணடைந்த லாரி டிரைவர்…!!

இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர் மீது லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள நல்லுக்குறிச்சி கிராமத்தில் காமாட்சி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் சக்கர வாகனம் மூலம் வேலை காரணமாக பரமக்குடி சென்றுள்ளார். இந்நிலையில் காந்தக்குளம் பகுதியில் உள்ள முனியப்ப சுவாமி கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது அப்பகுதி வழியாக ஜல்லி கல் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி எதிர்பாராத விதமாக காமாட்சியின் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் லாரியின் பின்பக்க டயர் முதியவர் மீது ஏறியதால் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து காமாட்சி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து லாரியை ஓட்டி வந்த பூதங்குடி கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் உடனடியாக பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்துள்ளனர். மேலும் காமாட்சியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |