இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்தடைந்ததில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் வேலம்பட்டி பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலை காரணமாக நாமக்கல் சென்ற இவர் மீண்டும் இருசக்கர வாகனம் மூலம் வேலம்பட்டிக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் பவித்ரம் ஏரிக்கரை அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே காளிபட்டியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்துள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக இருவருடைய இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்தடைந்துள்ளது. இந்த விபத்தில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்ற 2 இளைஞர்கள் பலத்தகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற எருமப்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.