Categories
தேசிய செய்திகள்

கல்விக்கடன் தள்ளுபடி…. புதுச்சேரி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

புதுச்சேரி வரலாற்றில் முதல்முறையாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழில் இன்று காலை பட்ஜெட் உரையாற்றினார். இதனை தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவையில் நிதித்துறையில் பொறுப்பை வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். 2021- 2022 ஆம் வருடத்துக்கான நிதிநிலை அறிக்கையை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்

இதில் பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. அந்த வகையில் ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழகத்தில் மாணவர்கள் பெற்ற கல்வி கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டு முதல் வகுப்பு மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும். பழங்குடியின மாணவர்களுக்கு கல்லூரி படிப்பு கல்வி இலவசம். மேலும் பட்டியலின பெண்களுக்கு திருமண உதவி தொகை 75 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சமாக உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |