Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 புதிய கல்லூரிகள்….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

சட்டசபையில் உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இதில் அனைத்து கட்சியினரும் உரையாற்றினர்.  அப்போது உயர் கல்வி துறை மானியக் கோரிக்கையின் போது பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழ்நாட்டில் புதிதாக 10  அறிவியல் கலை கல்லூரிகள் தொடங்கப்படும் என்று  அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அமைச்சர் பொன்முடி, திருச்சுழி, திருக்கோவிலூர், ஏரியூர், ஒட்டன்சத்திரம், தாராபுரம், ஆலங்குடி, கூத்தாநல்லூர், சேர்க்காடு, தாளவாடி ஆகிய இடங்களில் 10 கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |