Categories
தேசிய செய்திகள்

வயதாகியும் மாறாத காதல்… இறந்த மனைவியின் சிதையில் குதித்து… உயிர் விட்ட கணவன்… சோகச் சம்பவம்…!!!

ஒடிசாவில் மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் மனைவி இறந்த உதிரத்தில் கணவனும் குதித்து உயிர் விட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிஸா மாநிலம் காலஹன்டி மாவட்டம் சியால்ஜோடி என்ற கிராமத்தை சேர்ந்த நீலமணி சாபர் என்பவருக்கு 65 வயதாகிறது, இவருடைய மனைவி ரெய்பாரி. இவர் நேற்று முன்தினம் இறந்துவிட்டார். இவரது உடல் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. தானம் முடிந்தவுடன் அவர்களின் குல வழக்கப்படி, ரெய்பாரியின் நான்கு மகன்களும், உறவினர்களும் ஒரு குளத்தில் குளிக்கச் சென்றனர்.

ஆனால் நீலமணி சாபர் மட்டும் குளிக்க செல்ல மனைவியின் தெரியும் உடல் அருகிலேயே நின்று கொண்டிருந்தார். திடீரென்று யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் அவர் மனைவியின் சிதையில் குதித்தார். அவரது உடலிலும் தீ பிடிக்கவே, சற்று நேரத்தில் அவர் உடல் கருகி பலியானார். இச்சம்பவம் குறித்து அவரது உறவினர்கள் யாரும் காவல்துறையில் புகார் அளிக்கவில்லை. மனைவியின் பிரிவைத் தாங்க முடியாத நீலமணி சாபர், தானும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |