சட்டசபையில் உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து கட்சியினரும் உரையாற்றி வருகின்றனர். இதில் தொழிற்கல்வி படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை சட்டசபையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தாக்கல் செய்தார். முதல்வர் மு.க ஸ்டாலினின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சியான அதிமுக தனது முழு ஆதரவை வழங்கியது.
இந்நிலையில் பேசிய கலசப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ சரவணன், திருவண்ணாமலை அரசு கலை அறிவியல் கல்லூரியின் பெயரை கலைஞர் கருணாநிதி கலை அறிவியல் கல்லூரி என மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதை ஏற்ற அமைச்சர் பொன்முடி திருவண்ணாமலை அரசு கலை அறிவியல் கல்லூரியின் பெயர் கலைஞர் கருணாநிதி கலை அறிவியல் கல்லூரி ஆக மாற்றப்படும் என்று அறிவித்துள்ளார்.