கிராமத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவில் ஜோஸ் நார்த் என்னும் இடத்தில் எல்வா ஜங்கம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் கையில் துப்பாக்கியுடன் திடீரென்று புகுந்துள்ளனர். மேலும் அவர்கள் கிராமத்தில் உள்ள மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அவர்கள் வீட்டிலுள்ள பொருட்கள், உடைமைகள் போன்றவற்றை அடித்து உடைத்துள்ளனர்.
இந்த தாக்குதலில் 35 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஆளுநர் சைமன் லாலங் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதில் “இது ஒரு மனித தன்மையற்ற செயல். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக இச்சம்பவம் தொடர்பாக அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று கூறியுள்ளார்.