தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமைக்கான சட்டமுன்வடிவை பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று தாக்கல் செய்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் 7.5% ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2021-ஆம் ஆண்டு பொறியியல் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமைக்கான சட்டமு மசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்துள்ளார்.அரசு பள்ளியில் படிக்கும் கிராமப்புற மாணவர்கள் தொழிற்கல்வியில் சேர்வது குறைந்து வருவதால் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த இட ஒதுக்கீடு நடப்பு கல்வி ஆண்டிலேயே அமலாகிறது என்று சட்டபேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.