Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இடிதாக்கி 3 பேர் பலி …. 10 பேர் கவலைக்கிடம் ….. 20 பேருக்கு சிகிச்சை ….. புதுக்கோட்டையில் சோகம் …!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இடி தாக்கியதில் 3 பேர் உயிரிழந்திருக்கின்றனர் பலருக்கும் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் பல்வேறு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பந்தல் பட்டி என்ற இடத்தில் நிலத்தில் நிலக்கடலை அறுவடை செய்து  பலர் வேலை செய்து கொண்டு இருந்துள்ளனர். அப்போது பலத்த மழை பெய்யும் போது இடி இடித்தது அதில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இதில் 3 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 10 பேர் மிகவும் ஆபத்தலன் நிலையில் இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. தொடர்ந்து 10_கும் அதிகமான அம்புலன்ஸ்_சில் காயமுற்றவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஒரு தனி மருத்துவர்கள் குழுவே சிகிச்சை அளித்து வருகின்றது. தொடர்ந்து இந்த பகுதியில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இடி தாக்கி 30_க்கும் அதிகமானோர் காயமடைந்த சம்பவம் புதுக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |