Categories
தேசிய செய்திகள்

“ஆப்கானிஸ்தான் மக்கள் இந்தியா வர இ-விசா கட்டாயம்”… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

ஆப்கானிஸ்தானில் உள்ள மக்கள் இந்தியாவிற்கு வருவதற்கு விசா கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அங்கிருந்து இந்தியா வர விரும்புபவர்களுக்கு விசா கட்டாயம் என்று தெரிவித்துள்ளது. மேலும் இதற்காக மத்திய அரசு மின்னணு விசாவை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட விசாக்கள், தற்போது அவர்கள் இந்தியாவில் இல்லாத பட்சத்தில் உடனடியாக ரத்து செய்யப்படும்.

இனி ஆப்கானிஸ்தான் மக்கள் இந்தியாவிற்கு வரவேண்டுமென்றால் மின்னணு விசாவில் தான் பதிவு செய்ய வேண்டும். மத வேறுபாடு இல்லாமல் யார் வேண்டுமானாலும் இந்த மின்னணு விசாவில் விண்ணப்பிக்க முடியும். ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகங்கள் மூடப்பட்டு இருப்பதன் காரணமாக, டெல்லியில் விசா விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |