Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போட வேண்டுமா…? ரொம்ப ஈஸியா ‘வாட்ஸ் அப்’பில் முன்பதிவு செய்யலாம்… மத்திய அரசு ஏற்பாடு…!!!

கொரோனா தடுப்பூசி போடுவதற்கு வாட்ஸ்அப் மூலம் கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்யும் வசதியை மத்திய அரசு தொடங்கி வைத்துள்ளது.

இந்தியா முழுவதும் தீவிரமாக பருகிவந்தால் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தற்போது கட்டுக்குள் கொண்டு கொண்டுவரப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும் கோவின் என்ற இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்தும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வாட்ஸ் அப் மூலம் முன்பதிவு செய்யும் வசதியை மத்திய அரசு தற்போது தொடங்கி வைத்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை மந்திரி தனது பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: “வாட்ஸப்பில் Book Slot என்று டைப் செய்து மைகவ் இந்தியா கொரோனா உதவிமைய எண்ணான 91-9013151515 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பின்னர் பெறப்படும் ஓடிபி எண்ணை பதிவு செய்து உறுதிப்படுத்த வேண்டும். பிறகு அடுத்தடுத்து கூறப்படும் வழிகாட்டுதலின் அடிப்படையில் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான நேரத்தை தாங்கள் முன்பதிவு செய்து கொள்ள முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |