சமூக வலைத்தளங்களில் பதிவு போட்டதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக லிபின் என்ற வாலிபரை அரசியல்வாதிகள் சிலர் நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு கடத்தி சென்று கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாணவரணி துணை செயலாளர் லிபின். அதிமுகவில் முக்கிய நிர்வாகிகளின் மகன்கள், சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மகன்கள் லிபினை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிக் கொண்டு நெல்லைக்கு சென்றுள்ளனர்.
லிபினை கடுமையாக தாக்கி மீண்டும் நாகர்கோவிலில் கொண்டு வந்துவிட்டதாக நாகர்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் பதிவு போட்டு அதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக தன்னை கடத்தி காயபடுத்தியதாக லிபின் தெரிவித்தார்.