Categories
மாநில செய்திகள்

வன்னியர்களின் 10.5% இட ஒதுக்கீடு… தற்காலிக தடையில்லை… உயர்நீதிமன்றம்..!!

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டிற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது 

1983 ஆம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பின் படி வன்னியர்களுக்கு 10.5 ஒதுக்கீடு கடந்த தமிழக  அரசால் வழங்கப்பட்டது.. அதிமுக ஆட்சி முடிவுக்கு வரும் நிலையில், அரசியல் காரணங்களுக்காகவும், தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஓபிசி பிரிவில் இருக்கக்கூடியவர்கள் வழக்கு தொடர்ந்தார்கள்.. மிகவும் பிற்படுத்தப் பிரிவில் மற்றவர்களின் உரிமைகள் பாதிக்கப்படுகிறது, எனவே வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்..

இது தொடர்பாக 25க்கும் மேற்பட்டவர்களால் தொடரப்பட்ட இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. அப்போது, வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு தற்காலிகத் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

மேலும் வன்னியர் இடஒதுக்கீட்டு சட்டத்தின் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை, பணி நியமனங்கள் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என கூறிய நீதிபதிகள், இட ஒதுக்கீட்டிற்கு தடையை விதிக்க முடியாது என்றும், வழக்குகளின் இறுதி விசாரணையை செப்டம்பர் 14க்கு ஒத்தி வைத்தி வைப்பதாக தெரிவித்தனர்..

Categories

Tech |