Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் டிசம்பர் வரை…. வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனாவால் மக்களுடைய வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் மக்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. அந்த வகையில் ரேஷன் கடைகளில் ஒரு கிலோ துவரம் பருப்பு, மற்றும் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய்  மானிய விலையில் வழங்கி வந்தது.

இந்நிலையில் இந்த சிறப்பு பொது விநியோகத் திட்டத்தை டிசம்பர் வரை நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி ரேஷனில் மானிய விலையில் ஒரு கிலோ துவரம்பருப்பு ஒரு சமையல் எண்ணைய் டிசம்பர் வரை தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் டிசம்பர் வரை வழங்கப்படுகிறது.

Categories

Tech |