பெங்களூரு தரபனஹள்ளியை சேர்ந்தவர்கள் முபாரக், ஷெரீன் பானு தம்பதி. கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் ஷெரீன் பானு திடீரென்று காணாமல் போய் விட்டார். இதுகுறித்து அவரது பெற்றோருக்கு எந்த தகவலும் கொடுக்காமல் முபாரக் இருந்துள்ளார்.
இதற்கிடையில், மகளை பற்றி எந்த தகவலும் தெரியாததால் சந்தேகம் அடைந்த ஷெரீன் பானுவின் பெற்றோர் சோழதேவனஹள்ளி போலீசில் புகார் அளித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு முபாரக் தலைமறைவாகி விட்டார். இந்த நிலையில், தனது வக்கீலுடன் வந்த முபாரக் தனது மனைவியை கொலை செய்துவிட்டதாக போலீசாரிடம் கூறினார். உடனே அவரை பிடித்து கைது செய்து விசாரித்தனர். அப்போது கடந்த 5ஆம் தேதி சிக்கன் குழம்பு சரியாக வைக்கவில்லை என ஷெரீன் பானுவுடன் முபாரக் சண்டை போட்டுள்ளார்.
அப்போது ஆத்திரமடைந்த அவர், வீட்டில் கிடந்த உருட்டு கட்டையால் தாக்கி ஷெரீன் பானுவை கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவரது உடலை ஒரு மூட்டையில் வைத்து கட்டி சிக்கபானவாராவில் உள்ள ஏரியில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து சிக்கபானவாரா ஏரியில் வீசிய ஷெரீன் பானுவின் உடலை போலீசார் கைப்பற்றினர்.